அறையில் இருந்து வரும் வழியில் இடது பக்கம் அந்தக் குளக்கரை இருக்கிறது. பலமுறை அதைக் கடக்கும் முன்னர் வண்டியை நிறுத்தி உச்சா அடித்துவிட்டு அங்கு நின்று அதனை ரசித்துக் கொண்டிருப்பேன். மரங்கள் சூழ கொக்குகள் உலவும் இடம் அது. அன்றும் அப்படித்தான். வானில் பறக்கும் நாரைகளை நின்று ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு விமானம் போல மேலெழுந்து நேர்த்தியாகப் பறந்து செல்லும் காட்சி அற்புதமாக இருந்தது. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடி அல்லியும் தாமரையும் பூத்துக் கிடந்த அந்தக் குளத்தை கண்களால் விழுங்கியபடி இருந்தேன். ரொம்பநாள் ஆயிற்று. இப்படி ஓர் ரம்மியமான காட்சியும்… சுற்றியிருக்கும் அமைதியும் கிடைத்து.
நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே….. அப்படியெல்லாம் தொடர்ச்சியாக ஒரு இருபத்து நான்கு மணிநேரம் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது என்று.
இயற்கைக்கு அது பொறுக்காது. அழைத்தது அலைபேசி. எடுத்துப் பார்த்தால் சமூக ஆய்வாளர் சித்தானையிடம் இருந்து அழைப்பு. எடுத்ததுமே “அண்ணாச்சி உங்களுக்கு யாராவது தகவல் சொன்னார்களா?” என்றார். இல்லையே தோழா ஏன்? என்ன தகவல்? என்றேன். ”நம்ம பாண்டியன் அண்ணாச்சி போய்ட்டாரு. இப்பதான் தகவல் வந்தது…. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பிட்டல்ல வெச்சிருக்காங்க….” மறுமுனையில் சித்தானை ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். தோழர்….. போயிட்டீங்களா தோழர்…….. கண்களை உடைத்துக் கொண்டு குளத்தில் இருந்து நீர் தாரை தாரையாய்…. என்ன செய்வது? ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் அந்த இடத்திலேயே கொஞ்சநேரம் நின்றிருந்தேன். ஆக….. பாண்டியன் போயாச்சு.
முழுவதையும் வாசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள் :