சாவடிக்கிற அகாடமி…..

Home add
சாவடிக்கிற அகாடமி…..
.
.
அடச்சே…. சாகித்ய அகாடமி விருதுகளை டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, கேரளா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் உள்ள எழுத்தாளர்கள், சாகித்திய அகாடமி மூஞ்சியில் விட்டெறிந்து வருகிற நிலையில்….
.
கண்டிக்கலாமா… வேண்டாமா….
திருப்பிக் கொடுக்கலாமா…. அல்லது பட்டக்சுக்குக் கீழே போட்டு உட்கார்ந்துக்கலாமா?
என சிந்தித்து சிந்தித்து மூளையே முக்கால்வாசி தேய்ந்து போய் கிடக்கிறார்கள் தமிழகத்துப் படைப்பாளிகள்.
ஒருவழியாக எப்படியோ கி.பி 2065 க்குள் இவர்கள் முடிவெடுத்து விடுவார்கள் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது.
.
அடப் போங்கப்பா…. லெப்ட்டு…. ரைட்டுன்னு….. எங்கெங்கே லாபி பண்ணி…. யார் யாரக் குளிப்பாட்டி கஷ்டப்பட்டு வாங்கீருக்கோம் இதப் போயி திருப்பிக் குடுக்கச் சொல்றியே என்று ஒரு கோஷ்டி முக்கி முனகுகிறது….
.
சிந்தனையாளர்கள் கல்புர்கி கொலை… பன்சாரே கொலைக்கெல்லாம் திருப்பிக் குடுக்கச் சொல்றீங்களே…. முதல் பானிப்பட்டு போரில் அத்தனை பேர் செத்தாங்களே நீ அப்ப திருப்பிக் குடுக்கச் சொன்னியா? என்று முஷ்டியை மடக்குகிறது இன்னொரு கோஷ்டி….
.
இலக்கியத்துக்கான Entrance Exam ல் லேட்டஸ்ட்டா பாஸ் பண்ணீருக்குற ஒரு இலக்கியக் குட்டிச்சுவர் எங்கே தன்னோடதுலயும் கைய வெச்சுருவாங்களோங்குற பயத்துல விருதைத் திருப்பிக் குடுக்குறவங்களைப் பார்த்து கன்னா பின்னான்னு ஊளையிடுது…..
.
உனக்குக் கெடைக்கல…. அதுனால எனக்கும் நட்டுகிட்டுப் போகணும்ன்னு பாக்குறியா…..? என கொக்காணி காட்டுது இன்னொரு கும்பல்…..
.
அடப்பாவிகளா…..
காசக்கூட திருப்பித் தரவேண்டாம்…. மானத்தோட நாலு வார்த்தைகூடவா பேச முடியாது. அதுவும் ஊரே காறித் துப்பிய பிறகும்…. கக்கத்தைச் சொறிஞ்சுகிட்டு கொட்டாவி உடறீங்களே… இது நியாயமாப்பா?
.
.
பாம்பும் நோகாம தடியும் ஒடையாம ஒப்புக்கு ஒரு அறிக்கை விடறீங்களே தமிழ்ப் புடைப்பாளிகள் காள்….! இது அடுக்குமா?
.
கேரளத்துக் கவிஞர் சச்சிதானந்தம் தொடங்கி கர்நாடகத்து அரவிந்த மாளகத்தி வரைக்கும் அடிச்சு ஆடறாங்களே இன்னுமாப்பா உங்க தூக்கம் தெளியல?
.
.
ஆனாலும்…..
இந்த ரணகளத்துக்கு இடைலயும் ஒரு கிளுகிளுப்பு வரத்தான் செய்யுது ஒரு விசயத்த நெனக்கறப்போ…..
.
.
அது இன்னான்னா……..
.
நல்லவேளை சாகித்ய அக்காதெம்மி நம்ம எழுத்தாளரு சாரு நிவேதிதாவுக்கு விருது குடுக்கல…
.
.
தப்பித் தவறி குடுத்திருந்தா…..
”என் செல்ல நாய்கள் பப்புவுக்கும்…. சோராவுக்கும் கறிசோறு போட்டதுலயே நாலு லட்சம் செலவாயிடுச்சு….
.
இதுல ஒரு ஏழை எழுத்தாளன் எப்படி உயிர் வாழ முடியும்?
.
ஒரு எழுத்தாளன் நாய் வளர்ப்பது குற்றமா?
.
பிரான்ஸில் எழுத்தாளர்கள் டைனோசர் வளர்ப்பதற்குக்கூட பணம் தருகிறார்கள் ….
.
அதுசரி….
.
மீதி அந்த மூணு லட்சத்த நீங்க எப்பக் குடுக்கப் போறீங்க…?”ன்னு நோட்டீஸ் விட்டிருப்பார் இந்நேரம்.
.
.
தமிழ் எழுத்தாளனா கொக்கா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s