நாம் மனது வைத்தால் ….

Scavenge3
என்னைப் பொறுத்தவரை கொடுமையிலும் கொடுமை இந்தக் குப்பை வழிப்பதுதான்.
.
நாம் அன்றாடம் வீட்டில் இருந்து வெளியில் கொண்டு வந்து வீசுகிற கவர்களில் எத்தனை வித அசுத்தங்கள் மறைந்திருக்கின்றன என்பது நம் மனதுக்குத்தான் தெரியும்.
.
நாம் தொடக்கூட கூசுகிற அந்தக் குப்பைகளை அள்ளிப் போக தள்ளுவண்டிகளில்….
லாரிகளில் என பவனி வரும் அந்தத் தாய்களை…. இளைஞர்களை….
பார்க்கும் போதெல்லாம் கூனிக்குறுகிப் போகிறேன்.
.
பொட்டலம் கட்டிய குழந்தையின் மலத்தில் இருந்து துப்பிய சளி வரைக்கும் அனைத்தும் அதில் சங்கமமாகி இருக்கும்.
காக்கி உடுப்புக்கு மேல் ஒரு கலர் உடுப்பைத் தவிர வேறேதும் உபகரணங்களில்லை அவர்களிடம்.
.
நமது அரசுகள் அதிரடியாகச் செய்ய வேண்டிய வேலை மேலை நாடுகளில் இதற்கென பயன்படுத்தப்படும் நவீன கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்வதுதான்.
.
வீதியில் கிடப்பதை வாரி எடுத்து லாரிக்குள் வீசிவிட்டு அந்த முடைநாற்றத்தோடே பயணிக்கிறார்கள் அந்த ஜீவன்கள். நாம் வாகனங்களில் பின் தொடரும்போதுகூட மூச்சை உள்ளிழுக்காமல் சமாளித்து வேகமாய்க் கடக்கிறோம் நாம்.
.
செவ்வாய்க்கு செயற்கைக் கோள் விடும் காலத்திலும் இதுதான் நம் நிலை.
.
இது அன்றாடச் சூழல்.
ஆனால் அதுவே இன்றைய தமிழகம் சந்தித்திருக்கிற சூழல்?
.
Scavenge2
செத்து மிதக்கும் கால்நடைகள்…..
செத்த மனிதர்களது மிச்சங்கள்…. எச்சங்கள்….
தப்பித்த மனிதர்கள் போக்கிடமற்று வழியின்றி வெளியேற்றிய கழிவுகள்… என அனைத்தையும் அள்ளப்போவது யார்?
.
.
சென்னை மாநகராட்சியில் உள்ள அந்த 25000 துப்புறவுப் பணியாளர்கள்தான்.
.
வெள்ளம் வடியத் துவங்கிய பொழுதில் இருந்தே ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களது பணியை. வயிற்றைப் புரட்டி எடுக்கும் குமட்டலோடு அவர்கள்தான் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்
அத்தனை அசுத்தங்களையும்.
.
இதில் மட்டும் இடஒதுக்கீடு கேட்டு குரல் கொடுக்க மாட்டார்கள் எவரும். நாம் “பெருந்தன்மையாய்” ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டிருக்கிற
அருந்ததிய மக்களுக்கென்றே விட்டுக் கொடுத்திருக்கிற 100 சதவீத ஒதுக்கீடு அது.
.
ஆயினும் அதற்காக அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பரிசு எவ்வளவு தெரியுமா நண்பர்களே….?
.
இரண்டாயிரம் ரூபாய்.
.
”சிறப்பு” ”ஊக்க”த் தொகை.
2 கோடி கொடுத்தால் கூட எவரும் செய்யத் துணியமாட்டார்கள்.
.
இந்தப் பேரிடர்க் காலத்தில் எத்தனையோ பணி இருக்கலாம் தமிழக அரசுக்கு…
பல்லாயிரம் கோடி செலவிடப்படலாம்
நிவாரணப் பணிகளுக்கு. செய்யட்டும் நாமும் அதற்கு துணை நிற்போம்.
.
ஆனால் கேட்க நாதியற்ற அந்தத் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இந்தத் தொகை எந்தவிதத்தில் ஈடாகும் அவர்களது தியாகத்துக்கு?
.
இரண்டாயிரமல்ல….
இருபதாயிரமல்ல…
லட்ச ரூபாய் கொடுக்கலாம்….
.
எத்தனையோ கோடி கோடியாய் செலவாகப் போகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் அளிக்க முன் வர வேண்டும் தமிழக அரசு.
.
நாம் மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும்.
.
செயற்கைக் கோள்களுக்காக நாம் செலவிடும் தொகையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை இது.
.
ஏனெனில் சமூகம் சுத்தமாக இருப்பதற்காக தங்களை அசுத்தப்படுத்திக் கொள்கிறவர்கள் அவர்கள்.
.
.
செய்வீர்களா முதல்வரே?
Scavenge1

Advertisements

4 thoughts on “நாம் மனது வைத்தால் ….

 1. பாமரன்!வணக்கம். நவீன கழிவு அகற்றல் ஒரு பெரும் பிரச்சினையே அல்ல.ஆனால் இதன் பின்புலத்தில் சாதிய கட்டமைப்பு இருக்கிறது.அதனை தக்க வைத்துக் கொள்ளவே அரசு இயந்திரமும்,சாதி பற்றாளர்களும் விரும்புகிறார்களோ என்றே தோன்றுகிறது.

  எத்தனை விதமான வாகனங்கள் சாலையில் பயணிக்கின்றன.அத்தனையும் இந்தியாவின், தமிழகத்தின் உருவாக்கம்.கோவை பாலக்காட்டு ரோட்டில் எத்தனை விதமான டாங்கர் லாரிகள் கேரளாவை நோக்கி செல்கின்றன.அத்தனையும் உறிஞ்சும்,வெளியேற்றும் வசதிகள் கொண்டவை.

  வளர்ந்த நாடுகள் இப்படித்தான் கழிவுகளை அப்புற படுத்துகிறார்கள்.

  https://en.wikipedia.org/wiki/Garbage_truck

  கொஞ்சம் பேர் சுயமாரியாதை கற்று மாற்று தொழில்களுக்கு போய் விட்டமாதிரி தெரிகிறது. டாஸ்மாக் அடிமைத்தனத்திலும்,அறியாமையிலும் இன்னும் ஒரு தலைமுறை அப்படியே உழல்கின்றது.

  இதற்கெல்லாம் ஒரு கட்சியும் தேர்தல் அறிக்கை விட்ட மாதிரி தெரியவில்லையே திருமாவளவன்,கிருஷ்ணசாமி,சாதி காவலர்கள் ராமதாஸ்,அன்புமணி உட்பட.

 2. அன்பின் நண்ப,

  தங்கள் கருத்து மிகவும் சரியானதே. கீழ்த்தட்டு மக்களின் அவலங்களை உள்ளபடி உணர்ந்து எழுதியுள்ளீர்கள். இதனை அரசு செயற்படுத்துமா என்பது நிச்சயமில்லை. அதுவும் உங்கள் கணக்குப்படி 25,000 பேருக்கும் தலைக்கு ஒரு இலட்சம் வீதம் மொத்தம் 250 கோடி ரூபாய்களை வழன்கும் நிலையில் அரசு உள்ளதா என்பது தெரியவில்லை. எது எவ்வாறாயினும் எது செய்யப்படவேண்டும் என்பதைக் கூறிவிட்டீர்கள். நீங்கள் குறிப்பிட்ட தொகையை அளிக்க இயலைடினும் இயன்ற ஓர் தொகையினை அரசு வழங்கினால் அது அரசின் நியாயமான செயற்பாட்டிற்கு ஓர் அடியாளமாகவும், அதைப் பெறுபவர்களின் மனநிறைவுக்கும் வழிசமைப்பதாய் அமையும்.

 3. துப்புரவுத் தொழிலாளிகளின் பணி மிகவும் கடினமானது. எல்லோரும் தினசரி கடந்து போகின்ற காட்சிதான். துப்புரவுத் தொழிலாளிகள் ஒரு நீணட கம்பை வைத்திருப்பார்கள். அதன் ஒரு முனையில் ஈர்க்குச்சிகளால் ஆன துடைப்பத்தைக் கட்டியிருப்பார்கள். அதன் மூலம் குப்பைகளைப் பெருக்குவார்கள். குப்பைக் கடினமான பொருளாய் இருந்தால், அந்தத் துடைப்பத்தை தலைகீழாய்த் திருப்பி கைப்பகுதி உள்ள முனையால் அந்தக் கடினமான குப்பையைக் குத்திக் கிளறி பிறகு அதை அள்ளுவார்கள். அதாவது, நாம் “பூட்ஸ்’ காலால் எத்தத் தயங்குவதை அவர்கள் வெறும் கைகளால் செய்கிறார்கள்.
  எங்காவது சாக்கடை அடைத்துக் கொண்டால், அதிலிருந்து வாரி வெளியே கொட்டப்படும் பொருள்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஏழைகள், படிக்காதவர்கள் பயன்படுத்தி தூர எறியும் ஒரு பொருளைக்கூடக் காணமுடியாது. நாம் பயன்படுத்திவிட்டு தூர எறியும் ஒரு பொருள், எங்கோ ஒரு சக மனிதனின் தன்மானத்தோடு வினை புரிகிறது என்று நினைத்தால் நாம் வீசி எறிய மாட்டோம்.
  சிக்னலில் ஒரு குப்பைலாரி நிற்கும்போது, நம்மால் அதன் துர் நாற்றத்தை ஒரு நிமிடம் கூட தாங்கமுடிவதில்லை. ஆனால் கவனித்துப் பாருங்கள். அந்த லாரியின் பின்பக்கக் கதவில் இரு துப்புரவு தொழிலாளிகளாவது நின்று கொண்டிருப்பார்கள். துப்புரவுத் தொழிலாளிகளின் மீதான நமது பார்வை கயமைத்தனத்தின் உச்சம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s