ரணகளத்துக்கு மத்தியிலும் என்னா ஒரு கிளுகிளுப்பு…..

Anbumani
உன்னைக் கண்டால்
இமயமும் இறங்கிவிடும்….
சூயஸும் சுருங்கிவிடும்….
என்று அள்ளிவீசும் தன்னம்பிக்கைப் ப்ரியர்களே
தலை சுற்றிக் கீழே விழுந்துவிடுவார்கள்
பா.ம.கவினர் பேச்சைக் கேட்டால்…

ஆட்சியப் பிடிக்கறார்களோ இல்லையோ…
தன்னம்பிக்கை பயிரை உரம் போடாம
ஓகோன்னு வளர்க்குற
கோபிநாத்… ஷிவ்கேரா போன்றோர் பட்டியலில்
இனி பா.ம.க.வையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆடிக் காத்துல ஹரிக்கோட்டாவே ஆடுதாம்….
”தனித்து நின்று 200 தொகுதிகளை பா.ம.க. கைப்பற்றும்”கிறார்
டாக்டர் ராமதாஸ்.

இத்தனை ரணகளத்துக்கு மத்தியிலும்
என்னா ஒரு கிளுகிளுப்பு…..

ஆனாலும் உங்க தன்னம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையாப்பா?
Anbumani-with-S-Ramadoss

(டுபாக்கூர் பக்கங்கள் – குமுதம்)