இந்த ராதா கிச்சுலயும் வெங்காயம் வைக்கல….

radha2
நடிகை ராதாவின் பரமரசிகன் நான்.
அவரது ஒவ்வொரு படங்களையும்
கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன் நான்.
.
ஆனால்….
சமீபகாலமாக அவர் படும்பாடு
சொல்லி மாளாதது.
அவர் படும் துயரம் என் கண்களில் இருந்து
தாரை தாரையாக கண்ணீரை வழிய வைக்கிறது.
.
“என் கணவரை அபகரிச்சிட்டார் ராதா….
மீட்டுக் குடுங்க என் மணாளனை”ன்னு
உமாதேவின்னு ஒரு பொண்ணு புகார் குடுக்க….
.
“அவுரும் நானும் சின்னவயசுல
குண்டு விளையாடுற காலத்துல
இருந்தே பழக்கம்.
அதைத் தப்பா புருஞ்சுகிட்டு
புகார் குடுத்துடுச்சு அந்தப் பெண்.
.
இதுக்குக் காரணம்
நான் புழல் சிறையில் ஏழு ஆண்டுகள்
சேர்ந்து வாழ்ந்த அடச்சே….
என்னோடு ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து
இப்போது புழல் சிறையில் இருக்கும்
தொழில் அதிபர்தான்.
அவர் தூண்டிவிட்டுத்தான் இந்தப் புகாரைக்
கொடுத்திருக்கிறார் உமா.” என்று
நடிகை ராதா பதிலடி கொடுத்தார்.
.
அத்தோடு நிற்காமல் நெத்தியடியாய்
இன்னொன்றையும் சொன்னார்
என் அபிமானத் தாரகை ராதா.
.
“அவர் கணவரை அபகரித்து
வைத்துக் கொள்ளும் அளவுக்கு
அவர் முகேஷ் அம்பானியும் அல்ல.
அவரை நான் காதலிக்கும் அளவுக்கு,
அவர் பெரிய மன்மதனும் அல்ல.” என்று.
.
அவர் படும் பாட்டைப் பார்த்து
பத்து நாளா சோறு தண்ணிகூட
உள்ள இறங்காம தவிக்கிறதப் பார்த்துட்டு
”கலாரசனையத்த கந்தன்”…தான் கேட்டான்.

“உனக்கு என்னப்பா பிரச்சனை?”ன்னு.
.
இப்புடி இப்புடி…ன்னு விலாவாரியாச் சொன்னா…
.
இப்ப இதுவாயா தலையாய
பிரச்சனைங்குறான் அந்தக் கூறுகெட்டவன்.
.
“ஏம்ப்பா கந்தா…
எம்மாம் பெரிய நடிகை அவுங்க….
நான் கொழந்தையா இருக்குறப்போ
வந்த ”அலைகள் ஓய்வதில்லை” படத்துல
ஸ்கூலுக்குப் போகாம இருக்குறதுக்காக
இவுங்குளும் கார்த்திக்கும்
கிச்சுல வெங்காயத்தை வெச்சுகிட்டு
பரண்ல படுத்திருப்பாங்களே
காய்ச்சல் வர்றதுக்காக.

அந்த சீனைப் பார்த்தே
காய்ச்சல்ல படுத்தவன்யா நானு.

அதுவுமில்லாம நம்ம தலைவர் மணிவண்ணன்
படத்துலகூட….
”உன் புருசன்ந்தான்….
ஒனக்கு மட்டும்தான்”ன்னு பாட்டுப்பாடி
புருசனையே ஒப்படைச்சவங்கய்யா
நம்ம ராதா.
radha1
சினிமாவுலயே அடுத்தவங்க புருசனை
அபகரிக்க மனசு வராதவங்க
எப்படிப்பா நெசவாழ்க்கைல
இப்படிப் பண்ணுவாங்க?”ன்னு… குமுறித் தீர்த்தா….
.
கொலை வெறில நிக்குறான்
”கலாரசனையத்த கந்தன்.”
.
”யோவ் லூசு….
இந்த ராதா கிச்சுலயும் வெங்காயம் வைக்கல….

டிச்சுலயும் வெங்காயம் வைக்கல…

நீ சொல்ற ராதா
பேரன் பேத்தியோட
நல்லா இருக்காங்க.

அம்பிகாவோட தங்கச்சி ராதாவ சொல்ற நீ.
இது சுந்தரா டிராவல்ஸ் ராதா….

புரிஞ்சுதா….
உன்னமாதிரி துப்புக்கெட்டவன் எல்லாம்
சினிமா விமர்சனம் பண்ண வந்தா
இப்படித்தான் இருக்கும் பொழப்பு….”ன்னு
காரித் துப்புறான்.
.
.
ஓ…..
சாரி….
நாமதான் கொஞ்சம் அப்டேட் பண்ணிக்காம
விட்டுட்டமோ?
.
.
radha-latest
( “டுபாக்கூர் பக்கங்கள்.” குமுதம் வார இதழ் )