நியூட்டனின் முன்னோடி நமீதா…

”எழுத்தறிவித்தவன் இறைவன்”னு சும்மாவா சொன்னாங்க?
.
அதுவும் சைதாப்பேட்டை பள்ளியில் உள்ள
“இறைவன்”களின் திருவிளையாடல் பார்த்து
புல்லரிச்சுப் போச்சு.
.
அட…. ”திருவிளையாடல்”ன்னதும்
நீங்க எதுவும் ஏடாகூடமா யோசிக்க வேண்டாம்.

சி.பி.எஸ்.சி மேதைகளை உருவாக்கித் தரும்
அப்பள்ளியின் கேள்வித்தாள் எந்த லட்சணத்தில்
இருக்கிறது என்பதற்கான சேம்பிளை
என் தோழி கீதாஞ்சலி அனுப்பி
இருந்ததைப் பார்த்ததும்
அடிவயிறு கலங்கி விட்டது.
.
அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள்
ஒவ்வொன்னும் ஓகோ ரகம்.

அதைப் படிப்பதற்கு முன்
நீங்கள் எதற்கும் 108 ஆம்புலன்சுக்கு
ஒரு போனைப் போட்டுவிட்டுப் படிப்பது நல்லது.
.
அதிரடி கேள்வி ஒன்று :
=======================
அனுஷ்கா வகுப்பில்
மொத்தம் 304 மாணவர்கள்.
பள்ளி சுற்றுலாவிற்காக ஒவ்வொருவரும்
80 ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார்கள்.

அப்படியானால் கிடைக்கும்
மொத்த ரூபாய் எத்தனை?
.
.
அதிரடி கேள்வி இரண்டு :
=========================
kajalகாஜல் மூன்று ஒற்றைப்படை
எண்களைச் சேர்த்து வரும் எண்ணிக்கை 100.

காஜலின் கணக்கு எப்படி
நட்டுகிட்டுப் போச்சு என்று நிரூபி.
.
.
.
.

அதிரடி கேள்வி மூன்று :
=======================
சூர்யாவின் நீளம் 16 மீட்டர்.
அகலம் 4 மீட்டர்.
நிலத்தின் வடிவம் செவ்வகம்.
.
கார்த்திக்குடையதும்
அதே அளவுதான்.
ஆனால் நிலமோ சதுரம்.
.
karthickஅப்படியானால் கார்த்திக் நிலத்தின்
பரிமாணம் என்னவாக இருக்கும்?
.
.
.
.

அதிரடி கேள்வி நான்கு :
=======================
சமந்தாவுக்கு இருப்பது
5054 ஆப்பிள்கள்.

இவை ஜனவரியிலும் பிப்ரவரியிலும்
தோட்டத்தில் விளைந்தவை.
samanthaஅதில் ஜனவரியில் மட்டும்
சமந்தாவிடம் 2060 ஆப்பிள்கள்.

எனில், பிப்ரவரியில் மட்டும்
சமந்தா தோட்டத்தில்
எத்தனை ஆப்பிளை ஆட்டையைப் போட்டிருப்பார்கள்?
.
.
பாஸ்…
என்ன தலை கிறுகிறுன்னு வருதா?
இருங்க…. இருங்க…. மொதல்ல
இந்தத் தண்ணியக் குடிங்க….
இதுக்கே கலங்குனா எப்படி?
.
இன்னும் அரவிந்த்சாமில இருந்து
சந்தானம் வரைக்கும் ஏகப்பட்ட
கேள்விகள் மிச்சம் இருக்கு….
அதையும் பாத்திருவோம்…
.
ஆனா ஒன்னு மட்டும் உறுதி…..
.
இது இப்படியே போச்சுன்னா….
.
நாளைக்கு நியூட்டனுக்கு முன்னாடியே
புவியீர்ப்பு விதியைக் கண்டுபிடிச்சவர்
நமீதான்னும்….
.
.
டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு பின்னாடி
டாப்ஸிதான் இருந்தாங்கன்னும்
எழுதப் போறாங்க இந்தப் பள்ளிக்கூடப் பசங்க.
tapsee
.
எதுக்கும் எச்சரிக்கையா இருங்கப்பு.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் )
question-paper

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s