“இவர் மரித்தும் பேசுகிறார்”

lazy_cartoon
வாழ் நாளில் எதையும்
உருப்படியாகச் செய்ய மாட்டேன்
போலிருக்கிறது.
.
ஒரு நல்ல புத்தகமா ?
அது வெளிவந்து நாற்பதாண்டுகள்
கழிந்த பின்னரே படிக்கத் தொடங்குகிறேன்.
.
ஒரு நல்ல மனிதரா
அவருடைய தள்ளாத வயதிலேயே
தொடங்குகிறது எனக்கும் அவருக்குமான தோழமை.
.
ஒரு நல்ல திரைப்படமா?
ஊரே உச்சி முகர்ந்து கொண்டாடிக் கழித்து
கணக்கற்ற ஆண்டுகள் ஆன பின்னரே
காண்கிறேன் அதை.
.
இதில் வாழ்நாள் என்று எதைச் சொல்வது ?
அதுவும் ஐம்பதைத் தொட்ட பின்னர்?.
நல்லவைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே
போவது பிறவி நோய்தான் எனக்கு.
ஆனாலும் அவைகளை எட்டாமல்
விட்டுவிட மாட்டேன் என்கிற
நம்பிக்கைகளுக்கு மட்டும் குறைச்சலில்லை எனக்குள்.
.
அப்படித்தான் புயலிலே ஒரு தோணி நாவலாகட்டும்…
சற்றும் முன் பார்த்துமுடித்த
லைஃப் ஈஸ் பியூட்டிப்ஃபுல் (Life is Beautiful) படமாகட்டும்…..
”சுறு சுறுப்புச் சிகரம்” எனப் பட்டமே வழங்கலாம் எனக்கு.
.
அனைத்து அற்புதங்களையும்
வாசித்துவிட… கண்டுவிட….
இந்த ஆயுள் போதுமானதுதானா?
எனக்குமட்டுமில்லை எவருக்கும் போதாது
என்கிற உண்மை உறைக்கிறது.
ஆனால் காலம் கடந்தேனும் வாசிப்பேன்…
சந்திப்பேன் என்கிற அடங்காப் பிடிவாதம் மட்டும்
என்னுள் அடங்குவதேயில்லை.
.
இந்தவேளையில்
பாளையங்கோட்டை இங்கிலீஷ் சர்ச்சில்
பள்ளி கொண்டிருக்கும் ஹென்றி பவரது (Henry Bower)
கல்லரையில் எழுதப்பட்டிருக்கும்
வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
.
(இன்றைக்கு ஆலயத்தில் தொழுபவர்கள்
சுமந்து செல்லும் பிழை நீக்கப்பட்ட
அந்த வேதாகமம் இவரது மொழிபெயர்ப்புத்தான்….)
.
மிகச் சரியாக 131 ஆண்டுகளுக்கு முன்னர்
புதைக்கப்பட்ட அவரது கல்லரை மேல்
“இவர் மரித்தும் பேசுகிறார்” என்று
தமிழில் எழுதப்பட்டிருக்கிற வாசகத்தினைப் போல
ஒருவேளை நான் மரித்தும் வாசிப்பேனோ?
.
”முதல்ல ….டீட்டு வாசி.
ஆனால்…. தயவுசெய்து பேசாதே” என்கிற
ஒரு அசரீரி கேட்கிறதே….
.
அது யாருடையதாக இருக்கும்?
.
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s