நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?


வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல.
கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும்
கன்னட தேசத்தில் உண்டு என்பதைச்
சொல்லாமல் சொல்லுகிறது
சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம்.
.
ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம்
ஓடிக் கொண்டிருந்தாலும்….
மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என
ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு
ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு.
.
ஆம்…. கர்நாடக அரசின் “குவெம்பு பாஷா பாரதி”
வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான்
நம்மை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.
.
அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா? “பெரியார் விசாரகளு”
.
அதுவாகப்பட்டது : “பெரியார் சிந்தனைகள்.”
.
நானூறு பக்கங்களில்
பெண்விடுதலை….
சமூக நீதி….
பெளத்தம்… என 52 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகளை
கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
.
கீழ்வெண்மணியில் நடந்த தலித் படுகொலைகளைக் கண்டித்து
28.12.1968 விடுதலை நாளிதழில் வெளிவந்த
தலையங்கத்தையும் தேடிப்பிடித்து சேர்த்திருப்பது
வரலாற்றைப் படிக்காமலே வரலாற்றைப் படைக்க நினைக்கும்
சிலருக்கு பாடமாக இருக்கும்.
.
இந்நூல் வெளிவருவதற்குப் பின்னணியில் இருந்தவர்தான்
கன்னட பேராசிரியரான கே.வி.நாராயணா.
ஹம்பி பல்கலைக் கழகத்தில் ஒன்பதுமுறை
பதிவாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
அத்தோடு சமஸ்கிருதக் கலப்பில்லாத
கன்னட மொழி வளர்ச்சிக்காக உழைத்து வருபவர்தான்
இந்தக் கே.வி.நாராயணா.
.
பெரியாரின் சிந்தனைகளை
கன்னட மக்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு
பதிப்பாளராகத் துணை நின்றவர்
திராவிடப் பல்கலைக் கழகத்திலும்,
பெங்களூர் பல்கலைக் கழகத்திலும்
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய
கார்லோஸ் என்றழைக்கப்படும் பேராசிரியர் தமிழவன்.
.
பலருக்கும் முன்பாகவே எண்பதுகளில்
அமைப்பியல்வாதத்தினை (Structuralism) தமிழகத்தில்
அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்தான்
நவீன இலக்கியவாதியான தமிழவன்
.
பெரியாரை கன்னட அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளும் வகையில்
கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சிவலிங்கம்.
.
சிவலிங்கம் தமிழ் பேராசிரியர் மட்டுமில்லை.
கர்நாடக தலித் மக்களின் விடுதலைக்காக
“ஸ்வாபிமானி தலித் சக்தி” என்கிற இயக்கத்தினை
முழுவீச்சோடு நடத்தி வருபவர்.
.
நரபலி கொடுக்கப்பட்ட தலித் இளைஞனின் கொடூரக் கொலையை
உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த துணிச்சல்….

காதலுக்குத் துணை நின்ற தலித் பெண்ணை
நிர்வாணமாக ஓடவிட்ட கொடூர முகங்களைத் தோலுரித்த துணிவு….
என சிவலிங்கத்தின் பெயரைக் கேட்டாலே கர்நாடக அரசு கதிகலங்கும்.
.
(கடந்தவாரம் பெங்களூரு சென்றபோது
சிங்கிளாக எம்மைச் சந்தித்த இந்த சிங்கத்தைப் பற்றிப்
பின்னர் விரிவாக எழுதுகிறேன்…
.
பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் சுழன்று கொண்டிருக்கும்
இவருடன் கதைக்க விரும்புபவர்கள்
முன்னரே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அழையுங்கள்: 09886346428 )
.
ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்காக உழைத்துவரும்
இவரோடு மொழிபெயர்ப்பில் கைகோர்த்த மற்றொருவர் நல்லதம்பி.
.
இன்று இவர்கள் விதைத்த விதை
மரமாகி
கிளை பரப்பி
கனி தரும்போது….

கன்னட மக்கள் தங்களது உண்மையான நண்பர்கள் யார்?
தங்களைத் தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?
என்பதை துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள்.
.
( டுபாக்கூர் பக்கங்கள் – குமுதம் வார இதழ் )

Advertisements

2 thoughts on “நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

  1. இந்த நூல் வெளிவர உழைத்தோர்க்கும், இந்த செய்தியை வெளிக்கொணர்ந்த தங்களுக்கும் நன்றிகள் பல!

  2. மிக்க மகிழ்ச்சி தோழர்,பெரியாரைக் கன்னட மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் அதற்கு
    இது நல்ல வாய்ப்பு. ஏற்கெனவே வி.டி.ஆர். போன்றவர்கள் எழுதியும் பேசியும்
    வந்துள்ளனர். இருப்பினும் பெரியாரைக் கன்னட மக்கள் நேரடியாகப் படித்துப்
    புரிந்து கொள்வது மிகவும்பயனுள்ளதாக இருக்கும்.பதிவுக்கு நன்றி.

    2017-05-09 13:23 GMT+05:30 பாமரன் :

    > pamaran posted: ” வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற
    > மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது
    > சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான
    > போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம”
    >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s