” AGNI “ புத்திரிகள்…

” AGNI “ புத்திரிகள்.
====================

ஆபாச ஒழிப்புக் கழகம் ஒன்றை ஆரம்பித்து
அதற்கு புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்
வகையறாக்கள் தலைமை தாங்கினால்…
.
சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் சங்கராச்சாரிகள்
அறிவியல் அறிஞர்களின் மாநாட்டிற்குத்
தலைமை வகித்தால்….
.
ஜெயவர்த்தனே மனித உரிமை
மீறல்களைக் கண்டித்து முழங்கினால்…
.
துக்ளக் சோ பொதுவுடைமைச் சமுதாயம்
பற்றிப் பிரச்சாரம் செய்தால்…
.
எவ்வளவு அபத்தமாக இருக்குமோ
அவ்வளவு அபத்தமானது இந்த சிவசங்கரி
நடத்திவரும் “அக்னி” இயக்கம் (?).
(Authors Guild for National Integrity – AGNI )
.
ஏழை மக்களின் துயர் துடைக்க
இரவு பகல் பாராது தனது பேனாவில்
கண்ணீரை நிரப்பிக் கொண்டு
எழுதும் சிவசங்கரி….
.
பரம ஏழை ப. சிதம்பரம்….
.
ஓய்வுநேரப் புரட்சியாளர் மாலன்…
.
இப்படி இந்த வகையறாக்கள் இணைந்து
சென்னையிலுள்ள பிரமாண்டமான
பாம்குரோவ் ஓட்டலில் இந்திய மக்களின்
ஒருமைப்பாட்டுக்காக ஒப்பாரி வைத்தார்கள்
“அக்னி” விழாவில்.
.
தனது கதைகளில் குடிகாரக் கணவனையும்,
கொடுமைக்கார கணவனையும் வைத்தே
தனது காலத்தை ஓட்டும் சிவசங்கரி….

இந்தச் சமுதாயம்
யார் கைகளில் இருக்கிறது…?
.
இந்த மக்களின் ‘குடிக்கு’ப் பின்னால்
குடியிருக்கும் குற்றவாளிகள் யார்…?
.
அவர்கள் மட்டும் எப்படி வேட்டி அவிழாமல்,
ஜரிகை வேட்டியும், மைனர் செயினுமாய்
சமூகத்தில் “பெரிய” மனிதர்களாய்
உலா வருகிறார்கள்….?
.
என்பது பற்றியெல்லாம் எழுதுவாரென்று
எந்த முட்டாளும் எதிர்பார்க்க முடியாது.
.
ஏனென்றால் அவர் இருக்குமிடம் அப்படி.
.
இந்த தேசிய ஒருமைப்பாட்டுப் புலம்பல்வாதிகள்
மீண்டும், மீண்டும் முழங்குவது :
வடநாட்டிலிருந்து வந்து
இங்குள்ள மக்களைச் சுரண்டும் முதலாளிக்கும்…

இங்கிருந்து அங்குபோய்
அங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டும்
முதலாளிக்கும் இடையிலான
ஒருமைப்பாட்டைத்தான்.
.
மற்றபடிக்கு
தனது கிழிந்த சேலையில் மரக்கிளையில் தூளி கட்டி
மழலையைத் தூங்க வைத்துக்
கல்லுடைக்கப் போகும் ஏழைக் கொத்தடிமைக்கும்….
.
ஒரிசாவிலும், பீகாரிலும் பசிக் கொடுமையால்
விஷச் செடிகளை உண்டு ஊனமாகிப் போன
மக்களுக்கும் இடையிலான
ஒருமைப்பாட்டை அல்ல.
.
ஏனெனில் நிலைமை மாறாது
என்ற எண்ணம் இவர்களுக்கு.
.
“மாறாது என்ற சொல்லைத் தவிர
அனைத்தும் மாறிக்கொண்டேயிருக்கும்” என்று
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்
ஒரு மனிதன் சொல்லிப் போனான்.
.
இங்குள்ள சோத்துக்கற்ற கூட்டமும் ,
அங்குள்ள சோத்துக்கற்ற கூட்டமும்
இணையும் காலம் விரைவில் வரும்.
அப்போது இங்குள்ள அவதார புருஷர்கள்
துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று
எடுப்பார்கள் ஓட்டம்.
.
அப்போது இந்த “அக்னி”கள்
“பாம்குரோவ்” ஓட்டல்களில் நடக்காது.
.
ஏனென்றால் சேரிப்பகுதிகளின்
அக்னிச் சூட்டில்
அவைகள் எரிந்து சாம்பலாகியிருக்கும்.
.
.
( 1988 இல் வெளிவந்த எனது
முதல் தொகுப்பான
“அன்புத் தோழிக்கு,” நூலில் இருந்து….)
.
.

Advertisements

2 thoughts on “” AGNI “ புத்திரிகள்…

  1. ““மாறாது என்ற சொல்லைத் தவிர
    அனைத்தும் மாறிக்கொண்டேயிருக்கும்” என்று
    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்
    ஒரு மனிதன் சொல்லிப் போனான்.”
    .
    .
    இது 19 ஆம் நூற்றாண்டில் சொல்லப்படவில்லை . கிறிஸ்துவுக்கு முதலே சொல்லப்பட்ட்து
    கிரேக்க அறிஞர் HERACLITUS என்பவரால் சொல்லப்பட்ட்து

  2. சிவசங்கரி அவர்களின் சில நூல்களைப் படித்திருக்கிறேன். ஒரு கதை மிகவும் பிற்போக்குத்தனமாக இருந்தது (அல்லது, என் சிற்றறிவுக்கு அந்த ஒரு கதையின் பிற்போக்குத்தனம்தான் எட்டியது). ஏன் என்பது இப்பொழுது புரிகிறது. “ஏனென்றால் அவர் இருக்குமிடம் அப்படி” – இந்த ஒரு வரி உணர்த்தி விட்டது, அத்தனையையும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s