முட்டாள்…

முட்டாள் என்று கூகுளில் தேடினாலே
அமெரிக்கப் புர்ர்ச்ச்சியாளர் டொனால்ட் ட்ரம்ப்பின்
“திருமுகம்”தான் கண்சிமிட்டுகிறது.
.
இதைப் பார்த்ததும் ஒரு கதைதான்
என் நினைவுக்கு வருகிறது…..
.
அது….
.
‘சொர்க்கத்தின் வாசலில்’ அன்று ஏகப்பட்ட கூட்டம்.
வாசலில் நின்று கொண்டிருந்த
கடவுளின் ஏஜெண்ட் ஒவ்வொருவரையும்
யார் என்று விசாரித்த பிறகே
உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.
.
முதலில் எதிர்ப்பட்ட ஐன்ஸ்டீனிடம்…..
.
“நீங்கள்தான் உண்மையான ஐன்ஸ்டீன் என்பதை
எப்படி நம்புவது? நிரூபித்துக் காட்டுங்கள்”
என்று கூற….
.
“எனக்கொரு கரும்பலகையையும், சாக்பீசையும்
கொடுங்கள். நிரூபித்துக் காட்டுகிறேன்”
என்றார் ஐன்ஸ்டீன்.
.
இரண்டும் கொடுக்கப்பட்டது.
.
ஆற்றல்….நிறை….என ஏதேதோ கணக்குப் போட்டு
தான் கண்டுபிடித்த E = MC 2 என்கிற
பார்முலாவை நிரூபித்துக் காட்ட….
.
“அட…நீங்க உண்மையிலேயே
ஐன்ஸ்டீன் தான். உள்ளே போங்கள்” என்று
வழிவிட்டார் கடவுளின் ஏஜெண்ட்.
.
அடுத்து வந்தவரோ உலகப் புகழ் பெற்ற
ஓவியர் பிக்காசோ.
.
அவரையும் நிரூபித்துக் காட்டச் சொல்ல…
பிக்காசோ கரும்பலகையில் முன்னர் ஐன்ஸ்டீன்
எழுதியிருந்த சூத்திரத்தை அழித்துவிட்டு
வரையத் தொடங்கினார்.
.
அவர் வரைந்த அற்புதமான ஓவியங்களைப் பார்த்ததும்
மகிழ்ச்சிப் பெருக்கில் அப்படியே கட்டித் தழுவி….
“நீங்க மாபெரும் கலைஞர் பிக்காசோதான்.
நம்புகிறேன். உள்ளே போங்கள்” என்று வழி விட்டார் க.ஏ.
.
அடுத்து வந்து நின்றவர்
மற்றவர்களைப் போல் இல்லை.
.
அவர் ஒரு மகா மேதை.
.
ஆனால்…
அவரோ காவலுக்கு நின்றவரைத்
தள்ளிவிட்டு விட்டு உள்ளே போக முயற்சிக்க….
.
“முதலில் நீங்கள் யாரென்று சொல்லி
நிரூபியுங்கள். அப்புறம் அனுமதிக்கிறேன்”
என்று கடவுள் ஏஜெண்ட் கடுப்புடன் கூற….
.
“நான் தான் டொனால்ட் டிரம்ப் ”
என்றார் டிரம்ப்.
.
“சரி நீங்கள்தான் டொனால்ட் டிரம்ப் என்பதை
எப்படி நம்புவது?
உங்கள் அறிவுத் திறமையால்
உங்களை நிரூபித்துக் காட்டுங்கள்” என்றார் க.ஏ.
.
“எப்படி நிரூபிப்பது?” என்று
மீண்டும் டிரம்ப் கேட்க…
.
“உங்களுக்கு முன்பு வந்த
ஐன்ஸ்டீனும்….பிக்காசோவும்
எப்படி நிரூபித்தார்களோ அப்படி”
என்றார் கடவுளின் ஏஜெண்ட்.
.
“அது சரி…
யார் அந்த ஐன்ஸ்டீனும்…..பிக்காசோவும்?”
என்றார் டொனால்ட் டிரம்ப்.
.
“இம்புட்டு “அறிவு” இருக்குன்னா….
சந்தேகமேயில்லை நீங்க டொனால்ட் டிரம்ப்பேதான்…
உள்ளே போங்கள்” என்று
கதவுகளை அகலத் திறந்துவிட்டபடி
வெளியில் குதித்தோடினார் கடவுளின் ஏஜெண்ட்.

Advertisements