கலை ஒலக மாமேதை ஒலகநாயகன் அய்யா சமூகத்துக்கு…..

kuruthi

 கண்மணி….. வம்போட…. பாமரன்

நான்…. நான்…. எழுதும் கடிதம்…..

இல்ல லெட்டர்ன்னு வெச்சுக்கலாமா……

வேணாம் கடுதாசியே இருக்கட்டும்…..

ஊடால…… ஊடால….. ஆஸ்கர்…… ஐ.நா…….. சாக்ரடீஸ்…..

நீட்ஷே…… கிரகாம்பெல்…. சீமைக்கருவ….. அய்யனாரு…… எல்லாம் சேர்த்திக்குங்க…….

அய்யோ……. உண்மையச் சொல்லீர்றன் சாமீ…….. உங்கள மாதிரி எல்லாம் யோசிக்க நம்மால செத்தாலும் முடியாது. ஆனா….. சின்ன வயசுல இருந்தே உங்க படம் பார்த்துப் பாத்து வளந்த ஒடம்புங்க இது.

நீங்க சிகரெட் புடிச்சுகிட்டே சுமித்ராவோட திமிர அடக்குற ஸ்டைலுக்காக ”நெழல் நெசமாகிறது” படத்த பதினேழு தடவை பாத்திருக்கேன்…..

சொல்லாம கட் அடிச்சுட்டு மன்மதலீலை போயி ஊட்ல செருப்படி வாங்கீருக்கேன்…..

மாமன் கல்யாணத்துக்கு சிகப்பு ரோஜாக்கள் கண்ணாடியும் தொப்பியும் இருந்தாத்தான் வருவேன்னு ஊரையே கூட்டி அழும்பு பண்ணீருக்கேன்….

இளமை ஊஞ்சலாடறதப் பாத்துட்டு ’வெச்சா முன்னாடி முப்பது இஞ்ச் நீளத்துக்கு வெச்சாத்தான் போடுவேன்’ன்னு பெல்ஸ் பேண்ட்டுக்காகவே பெருஞ்சண்டை போட்டிருக்கேன்னா பாத்துக்கங்களேன்.. எப்படி நீங்க நம்ம ஊனோடயும்…. உசுரோடையும் கலந்து இருந்திருக்கீங்கன்னு…….

மனசார சொல்லணும்ன்னா உங்க ”மகாநதி” பாத்து தேம்பித் தேம்பி அழுதிருக்கேன்.

ஆனா……. உங்களத் திட்டறதுக்குன்னும் ஊருக்குள்ள நாலஞ்சு அனாமத்துக இருக்குதுக. நாம எதைச் சொன்னாலும் அதுக்கு ஒரு நொள்ளையச் சொல்றதே அவனுக பொழப்பு. இவனுக இருக்குறதே பூமிக்கு பாரம்ன்னு சொல்லி வோட்டர் லிஸ்ட்டுல கூட இவனுக பேரச் சேத்தாம விட்டிருக்காங்கன்னா பாருங்களேன்..

                                           நம்மளோட “குருதிப்புனல்” வந்த சமயம் இப்படித்தான் ஒருநாள் அதுக கிட்ட எக்குத்தப்பா மாட்டிகிட்டேன். உங்கள மாதிரியே…… இருக்குற மீசையையும் வழிச்சுகிட்டு வெறைப்பா நடக்கணும்ன்னு “அன்பு முடி திருத்தகம்” உள்ள நொழைஞ்சா……..

”வாப்பா பித்துக்குளி கமல் தாசா” ன்னு சத்தம் கேட்குது. பாத்தா….. நம்ம ”கலாரசனையத்த கந்தன்” பல்லுகூட வெளக்காம இழிச்சுகிட்டு உக்காந்திருக்கான் ஏற்கெனவே. என்னடாது ஏழரை எதுக்காலயே உட்காந்திருக்கேன்னு நெனச்சுகிட்டே…..

என்னப்பா கந்தா சேவிங்கா?….ன்னேன்.

”இல்ல…. மொட்டை” ன்னான்.

ஏன் திடீர்ன்னு மொட்டை?ன்னு கேட்க……..

 ”தங்கப்பதக்கம் எஸ்.பி.செளத்ரிக்கு அப்புறம் இருந்த ஒரே நேர்மையான போலீஸ் அதிகாரியும் போய்ச் சேர்ந்துட்டாரேன்னுதான் மொட்டை” ங்குறான் எகத்தாளமா.

இந்தக் கலாரசனையத்த கந்தன் எப்பவுமே இப்புடித்தான். எதச் சொல்ல வர்றான்னு லேசுல புரியாது. புரிஞ்சாலும் அதுக்குள்ள ஒரு உள்குத்து இருக்கும். என்ன பண்ணித் தொலைக்க….. நாயுக்கு வாக்கப்பட்டா கொலைச்சுதானே தீறனும்?

“யார் அந்த நேர்மையான அதிகாரி?”ன்னேன் புரியாம.

“யாரா……. நம்ம ’ஆதி நாராயணன்’தான்” ன்னு குருதிப்புனல்ல வர்ற உங்க கேரக்டர் பேரச் சொல்லீட்டு எளக்காரமா சிரிக்கிறான் கந்தன்.

ஏன் கந்தா அப்புடிப்பட்ட அதிகாரிகளே இல்லையா?ன்னேன்.

”அட கமல்தாசா……. இருக்காங்களோ இல்லியோ….. ஆனா உங்காளு மக்களுக்காக தீவிரமா போராட வர்றவங்க எல்லாம் கொடூரமா இருப்பாங்க….. அதிகாரி வீட்டு நாயக் கூட விட்டு வைக்க மாட்டாங்க…. அவுங்க ஊட்ல இருக்குற பொண்ணு…. பொண்டாட்டியக் கூட பாலியல் பலாத்காரம் பண்ணத் தயங்கமாட்டாங்க…..ன்னு அவுத்து உடறாரே சரக்க அத நெனச்சாத்தான் எரிச்சல் எரிச்சலா வருது”ங்குறான் கலாரசனை.

எரிச்சல் வந்தா என்னாவது சாம்பல் மேட்டுல உளுந்து படுத்துப் பொறளு…. ஆனா எங்காள அனாவசியமா வம்புக்கு இழுக்காதே. அது சரி….. அவுரு சொன்னதுல என்ன தப்பு?ன்னேன் கோபத்தோட…..

”சொன்ன நேரம்தான் மகாதப்பு……. அதுவும் தர்மபுரி பக்கம் இருக்குற வாச்சாத்தில பழங்குடி மக்களோட வீடுகள சூறையாடி, அப்பாவி ஆதிவாசிப் பெண்கள் 18 பேரை சூறையாடுன 108 போலீஸ்காரங்க மீதான வழக்கும்……

கோவைப் பக்கம் சின்னாம்பதீல பழங்குடிப் பெண்களை போலீஸ்காரங்க சீரழிச்ச வழக்கும்……. சந்தி சிரிச்சுகிட்டு இருக்கற நேரமாப் பார்த்து வந்திருக்கே உங்காளோட ”குர்ர்ர்ர்திப்புனல்” அத நெனச்சாத்தான் எதுல சிரிக்கறதுன்னே தெரியல. இத விடக் கேவலமான ஒரு போலீஸ் டாக்குமெண்ட்ரிய போலீசே நெனச்சாலும் எடுக்க முடியாது. அந்தத் ’ தெறமை ’ உங்க இன்பார்மருக்குத்தான் இருக்கு”.

ஒரு உண்மையான தேசபக்தர் எங்காளு….. அவுரப் போயி ஒரு போலீஸ் இன்பார்மர்ன்னு சொல்றியே கந்தா இது நியாமா?ன்னு கவலையோட கேட்டேன். ஆனா ஆளுதான் அசர மாட்டேங்கறான்.

தேசபக்தர்க லிஸ்ட்டுல உங்காளே மொதலா நிக்கட்டும் அதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. ஆனா அதுக்கு மொதல்ல……..

பயங்கரவாதின்னா யாரு?

தீவிரவாதின்னா யாரு?

போராளின்னா யாரு?

ஒவ்வொருத்தருக்குள்ளயும் என்ன வேறுபாடு? ங்குற அடிப்படை வித்தியாசங்களை தெரிஞ்சுக்கச் சொல்லு. எதுவும் தெரியாம சும்மா சொதப்பக் கூடாது…… புரிஞ்சுதா?” ன்னு பொழந்து கட்டுறான்.

காதல் இளவரசரே……. நான் என்ன உங்கள மாதிரி பெரிய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய தலகாணி சைஸ் புஸ்தகமெல்லாம் படிக்குற ஆளா? நானே தற்குறி. ஆனா நம்ம கந்தன் சொன்னதை எல்லாம் எந்தக் கேணையனாவது கேட்டான்னா நீங்க நியூஸ் பேப்பர் கூட ஒழுங்காப் படிக்காத ஆளுன்னு தப்பாப் புரிஞ்சுக்குவானுக. என்ன இருந்தாலும் நீங்க ”நம்மவரு” நான் அப்புடி நெனைக்க முடியும்களா?

”என்ன கமல்பித்தா பலத்த யோசனை? உன் கண்கள்ல ஒரு கலாச்சார பயம் தெரியுதே?” ன்னு தறிகெட்டு ஓடற நம்ம சிந்தனைக் குதிரையத் தடுத்து நிறுத்தீட்டான் கந்தன்.

இனியும் இவன்கிட்ட இருந்தா பொழப்பு நாறீடும்ன்னுட்டு……. சரி கந்தா பையனப் பள்ளிகூடத்துல இருந்து கூட்டீட்டு வரணும்ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.

கலைஞானியே ! உங்களோட எந்தப் படமா இருந்தாலும் மொதல் நாள் மொதல் ஷோ பாக்குற காலம் எல்லாம் மலையேறிப் போச்சேங்கறத நெனச்சாலே வருத்தமாத்தான் இருக்கு. இடைல வேற ஈழப்பிரச்னை…. இட ஒதுக்கீட்டுப் பிரச்னைன்னு ஏகப்பட்ட பிரச்னைக. முன்ன மாதிரியெல்லாம் படம் பாக்கவா முடியுது.?

                                திடீர்ன்னு ஒரு நாள் நீங்க பத்து வேசத்துல நடிச்சிருக்கிற படம் ஒண்ணு வந்திருக்குன்னு சொன்னாங்க. அட நம்ம சிவாஜி ஒம்பது வேசங்கள்ல நடிச்சதயே பீட் பண்ணி நம்மாளு பத்து வேசத்துல நடிச்சிருக்காரான்னு அடிச்சுப் புடிச்சு ஓடியாந்து பிளாக்குல டிக்கெட் வாங்கி ஒரு வழியா உள்ளாற பூந்திட்டேன்.

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் கொழப்பமா இருந்தாலும்… அடுத்த கமல் எப்ப வருவாருன்னு ஒரே குஷியாயிடுச்சு. படம் போட்டு கொஞ்சம் லேட்டா வந்த பக்கத்து சீட் ஆசாமி “படம் இப்பதான் போட்டாங்களா”ன்னு கேட்க…..

அட பக்கத்துல ஒரு கமல்…

ச்சே… வெறும் பிரமை. கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருந்தாலும்….. நீங்க ஒவ்வொரு சீன்லயும் தெறையில தோன்றி ”என்னப் பாரு…” ”என்னப் பாரு…”.ன்னு நடிச்ச நடிப்புல ஆடியே போயிட்டேன்.

ஒருவழியா இடைவேளை விட…… ஒரு டீயும் பப்சும் சாப்பிடலாமேன்னு வெளிய வந்தா……. கண்ணத் தின்ன நாயு எதையோ தின்ன மாதிரி….. நேரா வந்து மோதறானுக நம்ம ”மனித உரிமை மார்த்தாண்டனும்”, ”அறிவொளி அப்பாசும்”.

”என்ன அரைவேக்காடு……. எப்படி உங்காளு சர்க்கஸ்?” ங்குறானுக கர்மம் புடிச்சவனுக. கரூர் போனாலும் கருமம் தொலையாதுங்கறது இதுதானோன்னு தோணுச்சு.

ஏன்யா எங்காளு மாத்தி மாத்தி பத்து வேசத்துல கலக்குறாரு…… உங்குளுக்கெல்லாம் பாராட்டவே மனசு வராதா?ன்னு கோபமா கேட்டேன். ”பத்தென்ன பதினொன்னா இன்னொரு வேசம் கூட சேர்த்துப் போட்டிருக்கலாம் உங்க ஒலகம்.” ங்குறான் மனித உரிமை.

பதினொன்னாவதா…. அது என்ன வேசம்? ன்னேன்.

”ரெண்டே ரெண்டு தொட்டாங்குச்சி இருந்திருந்தா அசினாவும் அவரே வந்திருக்கலாம்….”ன்னு சொல்லீட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறானுக பண்ணாடைக.

”சார் பப்ஸ் வேணுமா?”ன்னு கேட்ட குரலைத் திரும்பிப் பார்த்தா நீங்க நிக்கறீங்க……. அடச்சே இதுவும் பிரமைதான். என்ன பண்ண…….. தியேட்டர்ல வடை போண்டா விக்கறவன் கூட உங்கள மாதிரியே தெரியறான் எல்லாம் படத்தோட பாதிப்பு……

( மத்த பாதிப்புகள் அடுத்த வாரம் )

18 thoughts on “கலை ஒலக மாமேதை ஒலகநாயகன் அய்யா சமூகத்துக்கு…..

 1. செமையான பாதிப்பு போலயே தல!
  அடுத்த வாரத்துக்காக வெயிட்டிங்!

  ஒரு SMS பண்ண முடியுமா!?
  போன் வேறு மாற்றியிருக்கிறேன்!
  நம்பர் பழசுல போயிருச்சு!

 2. Dear Pamaran,
  Kamal is a great actor/director and he is the one who has taken the tamil cinema to the new level.
  Please do not blindly comment about his movies as he is much better that lot of movie makers.
  Tamil cinema has to be taken to the new level and only few directors/actors are taking it. We should encourage them to do that and not just comment by giving few examples..

  • Dear Mr. Mani..though your views about kamal are true, i would like to point out that instead of kamal trying to project himself as an intellectual, he could just stayback as an actor, in which he is the best..Trying to portray himself as a genius he starts uttering nonsense.What is the use of taking cinema to new heights with stupidity? I would appreciate kamal’s mahanadhi but never Kurudhipunal..why should i encourage a nasty bullshit? He speaks for and against on same topic according to situation..for eample in virumaandi he says no”marana thandanai” in unnai pOl oruvan he says” shoot at sight”..wat is kamal..and who is he?

   • Dear Karikaalan,
    I too agree that Kamal is Projecting himself as a genius and he not giving important roles to others in most of his movies. I didnt say whatever Kamal does was correct. But in my view both posivite and negative comments should be given( this is not only for Kamal but for everyone).

    On your lines ” He speaks for and against on same topic according to situation..for eample in virumaandi he says no”marana thandanai” in unnai pOl oruvan he says” shoot at sight”..” – he himself clarified that it is the views of those character and not of his own.

  • “Kamal is a great actor/director and he is the one who has taken the tamil cinema to the new level.”
   எனுங்க நீங்க என்ன வேனா சொல்லுங்க மணிகன்டன் சொன்ன மாதிரி தமிழ் சினிமாவை ஒலக தரதுக்கு கொண்டு போண கமலை நீங்க இந்த வாங்கு வாங்கறீங்க.ஒரு தமிழன் உலக அளவில உயர்ந்த உங்களுக்கு பிடிக்காதே..என்னது கமல் தமிழனே இல்லையா? கைபர் வழியா வந்த கூட்டமா..

   நீங்கெல்லாம் இப்படி பேசுவது தெரிஞ்சுதான் எங்களு இனி அவரு நடிச்ச படங்களிலேயே எனக்கு புடிச்ச படம் மாதிரியே தொடர்ந்து நடிக்கறதா முடிவு பண்ணிட்டாரு எல்லாருத்துகிட்டையும் சொல்ல சொன்னார்….

   எனக்கு புடிச்ச படம் எது தெரியுமா?
   என்னது சகலகலா வல்லவனா?
   இல்லிங்க நிசமா சொல்றேன் அது பேசும் படம்

 3. அய்யா பாமரனுக்கு….

  ‘ஒருவனுக்கு ஒருத்தின்னு ‘ நவரச நாயகனே எடுத்து சொல்லி எயிட்ஸ் பிரச்சாரத்துக்கு கவுதமியோடரோடு, ரோடா நடந்து போயி சொல்லியும் ஏத்துக்காத இந்த சமூகம் அவர் சொன்னத எத நம்ப்போது.

  ‘உலக நாயகன்னு ‘ அவரே அவரப்பத்தி சொல்லியும் நம்பாத நீ… ‘ஹே..ராம் ‘ படத்தை பத்து முறை பாக்கனும்னு சபிக்கிறேன்.

  பெங்களூர்ல அவர் படம் ரிலீஸ் பன்னி … மொழிக்கு எல்லையெல்லாம் கெடையாது… கலைன்னா எல்லாருக்கும் சமம்னு காவிர் டெல்டா பகுதி விவசாயிக்கு புரிய வச்சிக்கிறாரு … நீ என்னான்னா அவரபத்தி அது இதுன்னு சொலிறியே…

  கலைஞ(ர்)னுங்க கோடி கோடியா .. சம்பாதிச்சாலே உமக்கெல்லாம் வயிறு எரியுதுய்யா…

  – சென்னைத்தமிழன்

 4. அய்யா,

  கலக்கி எடுக்குறீங்க.. அடுத்த வாரத்துக்கு நானும் வெயிட்டிங்..

  நன்றி,
  நிலவன்.

 5. Instead of making non sense comedy (I enjoy it though), critize directly. Be clear in what you want to critize. This will be more effective.

 6. How can we talk about positive & negative of kamal, when his film
  doesn’t , just for eyewash he tries to show himself as a as a genuine guy.
  “He himself clarified that it is the views of those
  Character and not of his own” –come’on mani try to be logical..

 7. பாமரன் உங்களது நாலு சேதி எனக்கு புடிச்சிருக்கு

 8. kamal hasssan wrongly created an illusion that he did something for tamilcinema’s growth.But he did nothing in terms of new treatment,original content,perfect screenplay,and a matured political views…He failed in all..Now he looks like a seamless.

  He was a good Actor.Thats all.

 9. உலக்கை நாயகன் பதவிக்கு பல பேர் மோதுகிறார்களாம். அமெரிக்க நாயகன் ஒபாமாவும் அதில் ஒருத்தர் தோழரே.

 10. Sare , intha nakkalukku ungalai vittal aarum illai. nallathan irukku. irunthalum kamalai – intha vaangu, vaangu reengalennu kastamagavum irukku.

  but very nice satire. no doubt.

  thank for your writings waiting for the next release.

  with love
  sai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s